Friday, January 17, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று அதிகாலை சைக்களிலில் சென்ற வேளையில் பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உள்ளான அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்குரி திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles