ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அனுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து 30 கிராம் ஐஸ் மீட்கப்பட்டதுடன், அதன் பெறுமதி சுமார் 4 இலட்சத்து எண்பதாயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தண்டனை பெற்றவர் என தெரியவந்துள்ளது.
அவர் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.