களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.