யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் பணத் தகராறு தொடர்பான வழக்கில் கைதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.