தலங்கம, அருக்பிட்டியவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவத்துகொட ஊதும் கந்த வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எஸ்.பிரியதர்ஷன என்ற 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சந்தேகநபரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சந்தேகநபர் உயிரிழந்தவரின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பத்தரமுல்லை தெற்கு தலங்கம தேவால வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.