Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு

மாத்தறை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு

மாத்தறை, கம்புருகமுவ புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது செப்டம்பர் முதலாம் திகதி முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால நேற்று (18) வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட போதே மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன், மாத்தறை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களை உரிய பிரிவில் உரிய முறையில் நியமிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles