கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை (விமான நிலைய டெர்மினல் ஷட்டில் சேவை) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து சேவையானது கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் மற்றும் மாக்கும்புர போக்குவரத்து நிலையத்திற்கு பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் இந்த புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட போதே விமான நிலையம் – கோட்டை தனியார் சொகுசு பேருந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தது.
மேலும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கும் சென்று தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சாரதி சங்கங்களும் இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததுடன், இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு இந்த பேருந்து சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.