Monday, January 19, 2026
22.2 C
Colombo
செய்திகள்உலகம்தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கப்பட்டார்

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கப்பட்டார்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அரசியலமைப்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற நாட்டின் பிரபலமான முற்போக்கு மூவ் ஃபார்வர்ட் கட்சியை நீதிமன்றம் கலைத்து, அதன் தலைவர்களை 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து தடை செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles