Saturday, May 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஷ வாயு தாக்கி இருவர் பலி

விஷ வாயு தாக்கி இருவர் பலி

மாலபே, கஹந்தோட்டை வீதி, ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றினுள் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 65 மற்றும் 45 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

இரசாயனங்கள் சிலவற்றை கலக்கச் சென்ற போது இருவரும் இந்த விஷ வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles