Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பிரதான வீதி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்திய இரு இளைஞர்கள் முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 வயதுடைய சஹ்ரான் முஹம்மது சமல்கான் என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் காத்தான்குடி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles