Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு156 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

156 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 42 மில்லியன் ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles