2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களால் 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த 7 மாதங்களில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 10.3% வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.