திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல கோடி ரூபா பெறுமதியான தங்கத் தாலி காணாமல் போனதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2010ஆம் ஆண்டு ஆலயத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 3 1/4 பவுன் எடைகொண்ட தாலியும் கொடியுமே காணாமல் போயிருப்பதாக திருகோணேஸ்வரர் ஆலய பரிபாலண சபையின் செயலாளர் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் போன குறித்த 3 1/4 பவுன் எடைகொண்ட தாலி மற்றும் கொடியை மீளப் பெற்றுத் தருவதாக குறித்த ஆலயத்தின் குருமார்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.