ஓய்வூதியதாரர்களின் இடைக்கால மாதாந்த கொடுப்பனவான 3,000 ரூபா, ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் சம்பள முரண்பாடுகளை சரிசெய்யும் வரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3,000 ரூபாவுடன் ஒக்டோபர் மாதம் மேலதிக கொடுப்பனவு 6,000 ரூபாவாக வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர், நவம்பர் மாதம் முதல் இதுவரையில் கிடைத்த 2500 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக, இந்த புதிய இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.