இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கேபி லூயிஸ் (Gaby Lewis ) 39 ஓட்டங்களையும், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் (Orla Prendergast ) 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் இனோஷி பிரியதர்ஷனி (Inoshi Priyadharshani) 2 விக்கெட்டுகளையும், உதேஷிகா பிரபோதனி (Udeshika Prabodhani) மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
146 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை கடந்தது.