Monday, January 19, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு689 கிலோ பீடி இலைகள் மீட்பு

689 கிலோ பீடி இலைகள் மீட்பு

புத்தளம் – எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த லொறியில் 21 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 689 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 43 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பீடி இலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி இயந்திர படகு ஒன்றும்இ பீடி இலைகளை கொண்டு செல்ல பயண்படுத்தப்பட்ட லொறி ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles