வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுடனான கலந்துரையாடலில் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக இது தற்போது பெரும் பிரச்சினையாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 35இ000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், சுங்கத் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளுக்கு முதன்மைக் கவனம் செலுத்தி அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தனது அரசாங்கத்தின் கீழ் செயற்படுவதாக அவர் அங்கு உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது