பலாங்கொடை, ஹல்பே பிரதேசத்தில் மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த நபர் மீது அந்த மரம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மரமொன்றை வெட்டி கயிற்றினால் இழுத்துக்கொண்டிருந்த போதே குறித்த மரம் அவர் மீது விழுந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.