கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
பேலியகொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சைக்கிளில் பயணித்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.