Thursday, February 13, 2025
23 C
Colombo
செய்திகள்வணிகம்அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கீரி சம்பா, வெள்ளை சீனி, உருளை கிழங்கு, வெள்ளை கௌபி, இந்தியா பெரிய வெங்காயம், பயறு, சிவப்பு கௌபி, பருப்பு, காய்ந்த மிளகாய், நெத்தலி, அரிசி, கடலை ஆகிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 248 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 230 ரூபாவாகும்.

வெள்ளை சீனி 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 249 ரூபாவாகும்.

இது தவிர வெள்ளை கௌபி விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப்பூண்டு, பச்சைப்பயறு மற்றும் சிவப்பு கௌபியின் விலை 30 ரூபாவினாலும், ஒரு கிலோ சிகப்பு பருப்பு 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles