Wednesday, May 6, 2026
30 C
Colombo
சினிமாநாக சைதன்யா - சோபிதா துலிபாலாவுக்கு நிச்சயதார்த்தம்

நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவுக்கு நிச்சயதார்த்தம்

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் விவாகரத்து செய்து பிரிவதாக அவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

அத்துடன், அவர்கள் இன்று நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.

அதனை உறுதி செய்யும் வகையில் நாகர்ஜுனா புகைப்படத்துடன் பதிவு ஒன்றைப் இட்டிருந்தார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,

‘எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles