ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் களமிறங்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) இடம்பெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல வேட்பாளர்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுப்பதாகவும், ஆனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தான் தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் உரிமை நாமல் ராஜபக்ஷவுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.