இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, உத்தேச இந்தோனேசியா-இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025 மார்ச்சில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.