31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர்இ ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் படகோட்டிகள் மூவரும் தலா 40 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஒரு வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அடுத்ததாக ஜூலை 23ஆம் திகதி கைதான 9 மீனவர்கள் ஏற்கனவே ஒருதடவை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனனை தொடர்ந்து அவர்கள் இம்மாதம் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.