அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நேற்று (06) விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓக்லஹோமா நகரில் உள்ள சன்டான்ஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.