Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதி மோசடி: பிரபல நடிகரின் மனைவி கைது

நிதி மோசடி: பிரபல நடிகரின் மனைவி கைது

இலங்கையின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி எனக் கூறப்படும் பெண்ணொருவர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (05) இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் என கூறப்படும் இந்த 37 வயதுடைய பெண் குருணாகல் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விமானம் செல்ல தடை விதித்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விமான நிலைய பொலிஸாரால் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles