அரச சேவையில் உள்ள ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக 2500 ரூபா அதிகரிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, ஓய்வூதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட 83,000 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் இந்த நிவாரணத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.