சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கைகளை எந்தவொரு தரப்பினரும் மீறினால் நாட்டுக்கு மீண்டும் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.