கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 207 கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டில் உள்ள முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா சந்தேகத்திற்கிடமான 6 பொதிகளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் மொத்த பெறுமதி 82 மில்லியன் ரூபா என கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.