பிரித்தானியாவில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அவசர கூட்டத்தை கூட்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளை சேதப்படுத்தியும், புலம்பெயர்ந்த குடியிருப்பாளர்களைத் தாக்கி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இதுவரை 150 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் போராட்டக்காரர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளுமாறு கோரியுள்ளார்.
வடமேற்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள குழந்தைகள் பாலே பள்ளியில் கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள நகரங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக சமூக ஊடகங்கள் மூலம் பரவிய தகவலின் காரணமாக இந்த வன்முறை போராட்டங்கள் ஆரம்பமாகின.
இங்கிலாந்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற போராட்ம் நடப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.