பலாங்கொடை சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு வருகைதந்த குழுவின் ஒருசிலர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சந்தர்பத்தில் அதில் இருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய கமல் பிரஷங்க என்பவர் ஆவார்.
நீரில் மூழ்கிய நபரை பிரதேச மக்கள் ஒன்றினைந்து பாரிய முயற்சியின் பின்னர் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் பம்பஹின்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற உள்ளது.
மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.