க்ளப் வசந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 10 பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த 10 சந்தேக நபர்களில் அத்துரிகிரிய பச்சை குத்தும் கடையின் உரிமையாளர் துலானும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.