Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணி அபார வெற்றி

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் துனித் வெல்லாலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் ஜெஃப்ரி வன்டர்சே 6 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.

இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1 – 0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles