அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பை அமுல்படுத்தும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அரச ஓய்வூதியர்களிள் தற்போது சுமார் 7 இலட்சமனோர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும், அதற்கமைவாக 2024 ஆம் ஆண்டில் இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கான அரசாங்கம் 8.4 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை சுமக்க நேரிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடன் நிர்வகிப்பதில் சவால்கள் இருந்தபோதிலும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் வழங்கும் விரைவான குறுகிய கால தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.