Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

இலங்கையர்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

தற்போது லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles