இத்தாலி குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி நேற்று (02) ஒலிம்பிக் மைதானத்தில் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டார்.
எதிரணி வீரரான இமானே கலிப்பின் குத்துச்சண்டைகளை தாங்க முடியாத கரினி, குத்துச்சண்டை போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியா குத்துச்சண்டை வீரரான இமானேவை எதிர்த்து ஏஞ்சலா கரினுக்கு 46 வினாடிகள் மட்டுமே விளையாட முடிந்தது.
இமானே கலிஃப் பிறப்பில் பெண்ணாக இருந்தாலும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஆண் மரபணு எண்ணிக்கை அவருக்கு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் போது இமான் கலிஃப் பாலின சோதனையில் பெண் என நிரூபிக்க தவறியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
ஆனால், அவருக்கு எந்த சோதனையும் இன்றி பரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்கள் பிரிவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இத்தாலியின் ஏஞ்சலா கரினி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவரை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டி ஆரம்பித்த 30 வது வினாடியில் ஏஞ்சலா கரினியின் முகத்தில் இமானே கலிஃப் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால் கரினியின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியுள்ளதுடன், அவர் அப்போதே போட்டியை நிறுத்துமாறு கூறி, தான் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கரினி இந்தப் போட்டியில் இருந்து விலகிய பின்னர் அவர் மேடையில் கண் கலங்கியுள்ளார்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கரினி,
“நான் எனது நாட்டுக்காக உண்மையாக இருந்து இருக்கிறேன். ஆனால், இந்த முறை என்னால் போட்டியில் தொடர்ந்து ஆட முடியவில்லை. இரண்டாவது குத்தை வாங்கியவுடன் என்னால் இந்த போட்டியில் விளையாட முடியவில்லை. இத்தனை ஆண்டுகால எனது குத்துச்சண்டை வாழ்வில் இப்படி ஒரு குத்தை நான் வாங்கியதே இல்லை. எனது மூக்கில் நான் அதிக வலியை உணர்ந்தேன். என் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். நான் இன்றைய இரவு தோல்வியடையவில்லை. ஆனால் முதிர்ச்சியுடன் சரணடைந்தேன். நான் ஒரு முதிர்ச்சி அடைந்த பெண். குத்துச் சண்டை மேடை தான் எனது வாழ்க்கை. நான் எப்போதும் உள்ளுணர்வுடன் இருந்திருக்கிறேன். சில விஷயங்கள் சரியாக இல்லை என்பதை நான் உணர்ந்ததால் இதை செய்தேன். இது சரணடைவது அல்ல. முதிர்ச்சியுடன் நிறுத்திக் கொள்வது.” என்றார்.