இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருபதுக்கு 20 தொடரில் இலங்கையை 3-0 என வீழ்த்தியது.
தற்போது ரோஹித் ஷர்மா மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்குத் தலைவராகத் திரும்பியுள்ளார்.
சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுகிறார்.
விராட் கோஹி, K.L ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஒரு நாள் அணியில் இணைந்துள்ளனர்.
அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கௌதம் காம்பீர் இணைந்த பிறகு இந்திய அணி பங்குகொள்ளும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இலங்கையின் மீது இந்தியா இதுவரையில் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளது.