அவுஸ்திரேலிய பிரஜைகளை லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களிடம் இதே கோரிக்கையை விடுத்துள்ளன.
சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிஇ லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.