ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகள் இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அது இன்று இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக முன்பிருந்த அதே நேரத்தில் இந்த செயற்பாடை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் முறை மூலம் ஆசன ஒதுக்கீடு பதிவு நேரத்தை திருத்தியமைத்து, அதனை இன்று (01) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.