ஜூலை மாதத்தில் 4,506 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,745 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.