ஐரோப்பாவில் தலைமறைவாகியுள்ளதாக கருதப்படும் பாதாள உலக குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான் மற்றும் டுபாயில் தலைமறைவாக உள்ள லொக்கு பெடி என்றழைக்கப்படும் ரொட்டுபே அமில அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதா இலங்கை பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் பிரான்ஸ் ஊடாக பெலாரூஸுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரானுக்கு நெருக்கமானவரான லொக்கு பெடியை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பொலிஸ் தகவல்கள் தெரிவித்ததாக மேற்படி உள்ளூர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை 8 ஆம் திகதி பிரபல வர்த்தகரான க்ளப் வசந்த சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக கஞ்சிபானி இம்ரான் மற்றும் லொக்கு பெடி ஆகியோர் கருதப்படுகின்றனர்.