Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் பல பகுதிகளுக்கு மழை

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40  கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles