Wednesday, February 19, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன்

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன்

அங்குருவாத்தோட்ட, வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாட்டியுடன் வளர்ந்த 13 வயதான குறித்த சிறுமி, அவரது மாமன் மகனால் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமி, பெற்றோர் இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளதுடன், அவர் ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த அதே வீட்டிலேயே, சந்தேக நபரான 18 வயதுடைய இளைஞன், குறித்த சிறுமியை பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (31) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles