எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் (31) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இன்று காலை குறிப்பிட்டார்.
கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பூரண ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டது.