ஓட்டமாவடி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மௌலவி ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டி 56 ரக துப்பாக்கி, 59 துப்பாக்கி ரவைகள், 2 மெகசீன்கள், ஒரு வாள் போன்றன கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.