பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் அவசர கண் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 29 ஆம் திகதி ஷாருக்கான் கண் பிரச்சனைக்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி சிகிச்சை பலனளிக்காததால் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.