Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுபோராடி தோற்றது இலங்கை அணி

போராடி தோற்றது இலங்கை அணி

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன 3 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles