இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 இலட்சம் டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.
ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த வருட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் முதல் தடவையாக சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.