இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.