இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Perera அதிகபட்சமாக 53 ஓட்டங்களையும், Pathum Nissanka 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Ravi Bishnoi 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டது.
பின்னர் டக்வத் லூயிஸ் முறைப்பாடி 08 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Yashasvi Jaiswal 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.